ரியல்மி நிறுவனம் வருகிற ஏப்ரல் 8ஆம் தேதி தன்னுடைய C Series- இல் மூன்று மொபைல்களை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஏப்ரல் 8ஆம் தேதி நடக்க இருக்கும் அறிமுக நிகழ்வில் ரியல்மி C20, ரியல்மி C21 மற்றும் ரியல்மி C25 ஸ்மார்ட்போன்கள் ரியல்மி இந்திய சந்தைகள் அறிமுகம் செய்கின்றது.
இந்த மூன்று ஸ்மார்ட் போன்களும் ஏற்கனவே பல நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியச் சந்தையில் இந்த ஸ்மார்ட்போன்கள் 10,000 ரூபாய்க்கு கீழ் தான் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மூன்று ஸ்மார்ட் போன்களும் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வர இருக்கின்றது.