யூடியூப் வீடியோக்களுக்கு DisLike எவ்வளவு என்பதை இனி பார்க்க முடியாது !

யூடியூப் வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது DisLike, இதற்கு யூடியூப் நிறுவனம் மிக விரைவில் ஒரு தீர்வைக் கொண்டு வர இருக்கின்றது.

யூடியூப் வீடியோக்களை பார்க்கும் பார்வையாளர்கள் வீடியோ பிடித்திருந்தால் Like செய்யவும் பிடிக்கவில்லை என்றால் DisLike செய்யவும் யூடியூப் தளத்தில் வசதிகள் இருக்கின்றது. இதில் தற்போது யூட்யூப் ஒரு சிறிய மாற்றத்தை கொண்டுவர திட்டமிட்டு உள்ளது.

ஏற்கனவே Like மற்றும் DisLike எண்ணிக்கையை மறைக்க வீடியோ படைப்பாளர்களுக்கு Youtube Studio-ல் வசதிகள் இருக்கின்றது, இருந்தபோதிலும் இதில் புதிய மாற்றங்களை கொண்டுவர யூட்யூப் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

சோதனை அடிப்படையில் வரும் வாரங்களில் யூடியூப் Like மற்றும் DisLike வடிவமைப்புகளில் சில மாற்றங்களை கொண்டுவர உள்ளது. இந்தப் புதிய வடிவமைப்பில் யூடியூப் வீடியோக்களுக்கு எவ்வளவு Dislike வருகிறது என்பதை பார்வையாளர்களால் பார்க்க முடியாது என்று யூட்யூப் கூறியுள்ளது.