போக்கோ X3 ப்ரோ மொபைல் இந்தியாவில் அறிமுகம் !

போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ X3 ப்ரோ என்கின்ற கேமிங் மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை,  விற்பனை தேதி மற்றும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

Read in : English

போக்கோ நிறுவனம் கடந்த மார்ச் 22ஆம் தேதி போக்கோ X3 ப்ரோ என்கின்ற மொபைலை உலகளாவில் அறிமுகம் செய்து இருந்தார்கள் இந்த மொபைல் தற்போது இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ X3 ஸ்மார்ட்போனின் மேம்படுத்தலாக புதிய போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட்போன் வருகிறது.

போக்கோ X3 ப்ரோ மொபைல் சாம்சங் கேலக்ஸி F62,  ரியல்மி X7 மற்றும் விவோ V20 2021 போன்றவற்றுக்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. 

போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட் போனின் அம்சங்கள் :

போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 860 பிராசஸர், கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு,5,160 எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 2 எம்பி மேக்ரோ மற்றும் 2 எம்பி போர்டிரெயிட் லென்ஸ் கொடுக்கப்பட்டது. மேலும் முன்பக்கத்தில் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

Also Read : Xiaomi Poco X3 Pro – Full phone specifications

போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட் போனின் இந்திய விலை :

RAMInternal StoragePriceBuy
6 GB128 GBRs.18,999Flipkart
8 GB128 GBRs.20,999Flipkart

போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட் போன் எப்போது விற்பனைக்கு வருகிறது ?

போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட் போன் ஏப்ரல் 6 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகின்றது.