போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் POCO M3 என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்து ஒரு மாதத்திற்கு பிறகு தற்போது Open Sale மூலம் விற்பனைக்கு வந்துள்ளது.
அதாவது இனி POCO M3 மொபைலை எந்த நேரத்திலும் பிளிப்கார்ட் தளம் மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்கிக் கொள்ளலாம். ஏற்கனவே இந்த மொபைல் அறிமுகம் செய்து இரண்டு வாரத்திற்குள் 2,50,000 மொபைல்களை விற்பனை செய்து சாதனை புரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைல் இந்தியாவில் கூல் ப்ளூ, போக்கோ யெல்லோ மற்றும் பவர் பிளாக் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் FHD + டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 Soc, 6,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளன. மேலும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
Also Read : POCO M3 Full Specification
இந்தியாவில் போக்கோ M3 ஸ்மார்ட்போனின் விலை:
Giving exactly what you need! #POCOM3, the OP performer with Killer looks is now on open sale on @Flipkart.
— POCO – Madder By the Minute (@IndiaPOCO) March 2, 2021
Get yours now: https://t.co/KaWmss6QXA pic.twitter.com/ztWKkyNB3U