போக்கோ நிறுவனத்தின் போக்கோ M3 மொபைல் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ன விலைக்கு வெளியாகும் என்கின்ற தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது..
போக்கோ நிறுவனம் போக்கோ M3 என்கின்ற ஸ்மார்ட்போனை கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உலகளாவிய சந்தையில் அறிமுகம் செய்திருந்தது. இந்த மொபைல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியது.
இதற்கு பதிலளித்த போக்கோ நிறுவனத்தின் இயக்குனர் அனுஜ் சர்மா ஜனவரி மாதத்தில் போக்கோ M3 மொபைல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இப்போது, டிப்ஸ்டர் முகுல் சர்மா ஒரு ட்வீட் மூலம் POCO M3 வாரிசு பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்..
M3…..
— Mukul Sharma (@stufflistings) January 19, 2021
DD/02/YYYY
போக்கோ M3 மொபைலில் இந்திய விலை எவ்வளவு இருக்கும் ?
போக்கோ M3 மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் USD 149 (தோராயமாக ரூ. 11,000)க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.