Nokia 5.4 விரைவில் அறிமுகம் செய்யப்படுகின்றது

HMD குளோபல் நிறுவனம் விரைவில் Nokia 5.4 மொபைலை அறிமுகம் செய்கின்றது. இதைப் பற்றிய தகவல்களை விரிவாக பார்க்கலாம்..

HMD குளோபல் நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் Nokia 5.3 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த வரிசையில் தற்போது Nokia 5.4 மொபைல் விரைவில் அறிமுகம் செய்கின்றார்கள்.  இந்த ஸ்மார்ட்போன் பற்றின பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

வெளியாகியிருக்கும் தகவலின்படி இந்த ஸ்மார்ட்போனில் பஞ்ச் ஹோல் டிஸ்பிளே வடிவமைப்பு, Snapdragon 665 SoC போன்ற சிறப்பம்சங்களுடன் இந்த மொபைல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 


நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆஸ்திரேலியாவில் உள்ள சில்லறை விற்பனையாளர் தளங்களில் நோக்கியா 5.4 பற்றிய சில தகவல்கள் வெளியாகி உள்ளது அதன்படி, இந்த மொபைல்  4 ஜிபி Ram மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலில் வெளியாக இருக்கின்றது. இதன் விலை பொருத்த வரைக்கும் இந்திய மதிப்பின்படி ரூ.20,223 (AUD 370) இருக்கும் என்று தெரிகின்றது.