விவோ நிறுவனத்தின் Vivo V20 Pro மொபைல் வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. Vivo V20 Pro அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே இதன் விலை கசிந்துள்ளது.
விவோவின் லேட்டஸ்ட் மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் Vivo V20 Pro வருகிற டிசம்பர் 2ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் நாட்டில் உள்ள பல்வேறு சில்லறை விற்பனையாளர்கள் வழியாக விற்பனை செய்யப்பட இருக்கின்றது.
இந்நிலையில் பல்வேறு E-commerce இணையதளங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கு முன்பதாகவே பட்டியலிடப்பட்டுள்ளது. விவோ வி20 ப்ரோ 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்போடு ரூ.29,990 என்ற விலையில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது