இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் விரைவில் பட்ஜெட் விலையில் இரண்டு புதிய மொபைல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் Re-entry கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்காக மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் பட்ஜெட் விலையில் மொபைல்களை அறிமுகம் செய்ய in என்கின்ற துணை பிராண்டு ஒன்றை உருவாக்கினார்கள்.
தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி தீபாவளிக்கு முன்னதாக, அதாவது நவம்பர் முதல்வாரத்தில் இந்தியாவில் 2 புதிய மொபைல்களை அறிமுகம் செய்ய மைக்ரோமேக்ஸ் திட்டமிட்டுள்ளது.
அறிமுகம் செய்யப்படும் இந்த மொபைல்களில் பேட்டரி திறன் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. விலைகள் பொருத்த வரைக்கும் முறையே ரூ.7,000 முதல் ரூ.15,000 க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.