Micromax துணை பிராண்டு அறிமுகம் ? ரீ-என்ட்ரி கொடுக்க முடிவு !

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய புதிய துணை பிராண்டு அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்திய சீன எல்லை பிரச்சினை காரணமாக சீன மொபைல்களுக்கு மாற்றாக இந்திய மொபைல் நிறுவனங்களை பல இந்திய மக்கள் தேடி வருகின்றார்கள். இந்த சூழ்நிலையில் இந்தியாவை சேர்ந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மீண்டும் இந்திய சந்தையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றார்கள்.

இதற்காக தற்போது மைக்ரோமேக்ஸ் நிறுவனம் in எனும் பெயரில் துணை பிராண்ட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்தத் துணை பிராண்டிற்கு மத்திய அரசு அனுமதி கொடுத்த பிறகு பல்வேறு ஸ்மார்ட்போன்கள் in என்கின்ற துணை பிராண்ட் மூலமாக அறிமுகம் ஆகும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது. 

இந்திய பயனர்கள் முழுமையாக பயன்பெறும் நோக்கில் இந்த பிராண்டின் எதிர்கால திட்டங்கள் இருக்கும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்து இருக்கிறது.