19 நிமிடங்களில் 100% பேட்டரி சார்ஜ்! 80W Mi வயர்லெஸ் சார்ஜிங் அறிமுகம்

சியோமி நிறுவனம் 19 நிமிடங்களில் 100% பேட்டரி சார்ஜ் செய்யும் 80W மி வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வேகமாக சார்ஜ் செய்யும் தொழில் நுட்பத்தை பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றார்கள். தற்போது சியோமி நிறுவனம் 19 நிமிடங்களில் 100% பேட்டரி சார்ஜ் செய்யும் 80W மி வயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த 80W மி வயர்லெஸ் சார்ஜிங் வேகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் சார்ஜிங் வேகத்தை அறிந்துகொள்ள Mi நிறுவனம்  ஒரு டெமோவை வெளியிட்டுள்ளார்கள். இதில் 4000 எம்ஏஎச் பேட்டரியை வெறும் 19 நிமிடங்களில் நிரப்புகிறது. 

இந்தப் புதிய தொழில்நுட்பத்தில் சியோமி எந்த மொபைலை அறிமுகம் செய்வார்கள் என்பதைப் பற்றி தகவல் எதுவும் இல்லை.