சர்வதேச மொபைல் சந்தையில் மீண்டும் முதலிடம் பிடித்தது சாம்சங்

தென் கொரிய நிறுவனமான சாம்சங் சர்வதேச மொபைல் சந்தையில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு மந்த நிலையில் காரணமாக கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் சர்வதேச மொபைல் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை பின்னுக்குத்தள்ளி ஹூவாய் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்திருந்தது.

தற்போது 2020 ஆகஸ்ட் மாதத்தில் ஹூவாய் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி மீண்டும் சாம்சங் நிறுவனம் சர்வதேச சந்தையில் முதல் இடத்தை பிடித்துள்ளது. சமீபத்திய கவுண்ட்டர்பாயிண்ட் அறிக்கையின்படி  2020 ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச சந்தையில் சாம்சங் நிறுவனம் 22 சதவீத பங்குகளை பெற்று இருக்கிறது. ஹூவாய் நிறுவனம் 16 சதவீத பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது, 11 சதவீத பங்குகளை பெற்று சியோமி நிறுவனம் நான்காவது இடத்தில் இருக்கின்றது.

உலகச் சந்தை மற்றும் அல்லாமல் இந்திய சந்தையிலும் தொடர்ந்து சாம்சங் நிறுவனம் முதலிடத்தில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.