விரைவில் ஜியோ 5ஜி ! ஜியோ 5ஜி சோதனை வெற்றி

ஜியோ நிறுவனத்தின் 5ஜி சோதனை வெற்றி பெற்றுள்ளது. .இதனால் ஜியோவின் 40 கோடி வாடிக்கையாளர்களும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

ஜியோ 4ஜி வருகைக்கு பின்பு இந்தியாவில்  இணைய பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4ஜி சேவையை மிகக் குறைவான விலைக்குக் கொடுத்து வருகின்றார்கள்.

தற்போது ஜியோ நிறுவனம் 4ஜி சேவையில் கிடைத்த வெற்றியை அடுத்தகட்டத்திற்குக் எடுத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஜியோ நிறுவனத்தில் குவால்காம் நிறுவனம் 0.15 சதவீத பங்குகளை சமீபத்தில் வாங்கியது. 

குவால்காம் நிறுவனத்தின் 5ஜி நிகழ்வில் ஜியோ செய்த 5ஜி  சோதனையில் அதிகபட்சம் 1Gbps இணைய வேகம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக தெரிவித்தது.இதனால் ஜியோவின் 40 கோடி வாடிக்கையாளர்களும் 1 ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும்.

ஜியோ நிறுவனமும் குவால்காம்  நிறுவனமும் இணைந்து இந்தியாவில் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.