மொபைல் விற்பனையில் சாதனை புரிந்த ப்ளிப்கார்ட்

பிளிப்கார்ட் பிக் பில்லியன்  டே விற்பனை அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெற்றது.  இந்த விற்பனையில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ப்ளிப்கார்ட் சாதனை படைத்துள்ளது.

நடந்து முடிந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன்  டே விற்பனையில் பல்வேறு சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. குறிப்பாக பல்வேறு முன்னணி மொபைல் நிறுவனங்கள் தங்களுடைய மொபைல் போன்களுக்கு அதிக சலுகைகளை கொடுத்தார்கள். 

இதன் காரணமாக பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை அதிக அளவில் இந்த விற்பனையில் வாங்கி உள்ளார்கள். நடந்து முடிந்த இந்த விற்பனையில் ஒரு நொடிக்கு 14 ஸ்மார்ட்போன்களை விற்று பிளிப்கார்ட் சாதனை புரிந்துள்ளது.