வாட்ஸ்அப் Web-ல் காலிங் வசதி ? புதிய அம்சம் விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப் வெப் செயலியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங்  அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்படுகின்றது.

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம்  செய்து வருவார். அந்த வரிசையில் தற்போது வாட்ஸ்அப் தனது வெப் பதிப்பில் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் வசதியை கொண்டு வர இருக்கின்றார்கள்.

தற்போது இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் வெப் 2.2043.7 பீட்டா பதிப்பில் வழங்கப்பட்டு இருக்கிறது. மிக விரைவாக அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதியை வாட்ஸ்அப் கொடுத்து இருக்கின்றது.