ரெட்மி நோட் 10 சீரிஸ் மொபைல்கள் மிக விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது
சமீபத்தில் நடந்துமுடிந்த Amazon Great Indian Festival-இல் ரெட்மி நோட் 9 சீரிஸ் மொபைல்களுக்கு ரெட்மி அதிக தள்ளுபடியை வழங்கியது. இதையொட்டி தற்போது ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 10 தொடர் மாடல்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
முகுல் சர்மா என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட சான்றிதழ் தளத்தின் ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார். அதன்படி Redmi Note 10 மொபைல் இந்தியாவில் 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிகிறது.
அதேபோல் இந்த ரெட்மி நோட் 10 சீரிஸில் மற்றொரு மொபைல் 108 மெகாபிக்சல் சென்சார் உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
The global variant of the alleged Redmi Note 10 (M2007J22G) appears to be coming up soon. Visits the EEC certification.#Xiaomi #Redmi #RedmiNote10 pic.twitter.com/zE1wpLeaV8
— Mukul Sharma (@stufflistings) October 22, 2020