“IN 1b and IN note 1 – ALL BOOKED! மைக்ரோமேக்ஸ் மொபைலுக்கு இவ்வளவு வரவேற்பா !

நீண்ட நாட்களுக்குப் பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பட்ஜெட் விலையில் மைக்ரோமேக்ஸ் இன் 1பி மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் நோட்1 என்கின்ற இரு மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தார்கள். 

இந்த மொபைல்களின் முன்பதிவு நேற்று(நவம்பர் 10) பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக நடைபெற்றது. இந்த விற்பனை நேற்று(நவம்பர் 10)  நண்பகல் 12 மணிக்கு துவங்கியது. அதே நாளில் இரவு 7:36 மணியளவில் மைக்ரோமேக்ஸ் இன் 1பி மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் நோட்1 ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் வாடிக்கையாளர்களால் முன்பதிவு செய்யப்பட்டு விட்டதாக நிறுவனம் தரப்பில் உறுதி செய்யப்பட்டது..

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய சமூகவலைத்தள பதிவில் “நீங்கள் காட்டிய அன்பையும் ஆதரவையும் கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்”  என்று கூறியுள்ளார்கள்

மைக்ரோமேக்ஸ் இன் 1பி மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் நோட்1 ஸ்மார்ட்போன்கள் விற்பனை எப்பொழுது ?

மைக்ரோமேக்ஸ் இன் நோட்1 மொபைல் நவம்பர் 24ஆம் தேதி Flipkart வழியாக விற்பனைக்கு வருகிறது அதைத் தொடர்ந்து மைக்ரோமேக்ஸ் இன் 1பி மொபைல் நவம்பர் 26 ஆம் தேதி விற்பனைக்கு வருகின்றது.

Micromax In Note 1, In 1b விலை :

Micromax In Note 1

Micromax In Note 1 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.10,999 க்கும், இதன் 4 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.12,499 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

RamInternal StoragePriceBuy
4 GB64 GBRs.  10,999flipkart
4 GB128 GBRs.  12,499flipkart

Micromax In 1b

Micromax In Note 1b ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி மாடலானது ரூ.6,999 க்கும், இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.7,999 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

RamInternal StoragePriceBuy
2 GB32 GBRs.  6,999flipkart
4 GB64 GBRs. 7,999flipkart