Shopping பட்டனை அறிமுகம் செய்த WhatsApp – இனி எளிதாக ஷாப்பிங் செய்யலாம்!

Whatsapp Business வாடிக்கையாளர்களுக்கு புதிய ஷாப்பிங் பட்டனை அறிமுகம் செய்தது வாட்ஸ்அப்.

ஆயிரக்கணக்கான தகவல்தொடர்பு செயலிகள் இருந்தாலும்,வாட்ஸ் அப் செயலியை தான் பலரும் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் வாடிக்கையாளர்கள் எளிதாக ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது.

இந்தப் புதிய  பட்டன் ஆனது வாடிக்கையாளர்களுக்கு பிஸ்னஸ் பட்டியலைக் கண்டுபிடிப்பதை எளிதாக்கும். இதில் Setting திரையில் வாய்ஸ் கால் தேர்வுக்கு அருகில் புதிய அப்டேட் தேர்வுக்கான பட்டன் காண்பிக்கப்படும். அந்த பட்டனை அழுத்தினால் போதும் விற்கப்படும் பொருட்கள், விலை ஆகியவைகளை அறிந்துக் கொள்ளலாம்.