Micromax In 1b ஸ்மார்ட்போன் முன்பதிவு துவங்கியது

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்த Micromax In 1b ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ளது.

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கடந்த வாரம் இந்திய சந்தையில் மைக்ரோமேக்ஸ் இன் 1பி மற்றும் மைக்ரோமேக்ஸ் இன் நோட்1 என்கின்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் மைக்ரோமேக்ஸின் அதிகாரப்பூர்வ இணையதளம் தளம் வழியாக விற்பனைக்கு வர இருக்கிறது.


இந்நிலையில் மைக்ரோமேக்ஸ் இன் 1பி மாடல்களின் முன்பதிவு இந்தியாவில் இன்று (நவம்பர் 10) மதியம் 12 மணிக்கு துவங்கியுள்ளது. இந்த தகவலை மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கம் மூலமாக உறுதி செய்து உள்ளார்கள். மைக்ரோமேக்ஸ் இன் 1B ஸ்மார்ட்போன் நவம்பர் 26முதல் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு கிடைக்கும்.