தீபாவளிக்கு முன்பே முன்பதிவை துவங்கியது Micromax ! Micromax IN 1b மற்றும் IN note 1 வாங்க போறீங்களா ?

சமீபத்தில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த Micromax IN 1b மற்றும் IN note 1 இரண்டு மொபைல்களின் முன்பதிவு தீபாவளிக்கு முன்பே ஆரம்பிக்க இருக்கின்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மைக்ரோமேக்ஸ் நிறுவனம் சமீபத்தில் Micromax IN 1b மற்றும் IN note 1  என்கின்ற இரு மொபைல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இந்திய மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது.

Micromax IN note 1 மொபைல் வருகிற 24-ஆம் தேதி விற்பனைக்கு வர இருக்கின்றது அதைத்தொடர்ந்து Micromax IN 1b நவம்பர் 26 விற்பனைக்கு வருகின்றது. இந்நிலையில் இந்த இரண்டு மொபைல்களும் நவம்பர் 10 ஆம் தேதி மதியம் 12 மணி (நண்பகல்) பிளிப்கார்ட் வழியாக முன்பதிவுகளுக்கு திறந்துவிடப்படும் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனம் கூறியுள்ளார்கள்.