ரூ4000 விலை குறைந்த iQoo 3 ஸ்மார்ட்போன்

IQoo 3 Price Cut in India , Now Starts at Rs. 34,990

iQOO நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் iQoo 3 என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது இந்த மொபைல் போனின் ஆரம்ப விலை  ரூ.34,990-யாக உள்ளது. இந்த விலை இந்த மொபைல் அறிமுகம் செய்தபோது இருந்ததைவிட 4000 ரூபாய் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

iQoo 3 மொபைல்   ஸ்மார்ட்போனின் தற்போதைய விலை :

8GB + 128GB (4ஜி)மாடலின் விலை ரூ.36,990-யில் இருந்து ரூ.34,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. 

8GB + 256GB (4ஜி) மாடலின் விலை ரூ.39,990-யில் இருந்து ரூ.37,990-யாக குறைக்கப்பட்டுள்ளது. 

12 ஜிபி + 256 ஜிபி (5ஜி)  மாடல் எந்த விலைக் குறைப்பும் இது வரைக்கும் இல்லை.