Google adds 4 new features to video calling Google Duo app
வீடியோ கான்பரன்சிங் செயலிகளை மக்கள் அதிகம் பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். இதன்காரணமாக நிறுவனங்களும் போட்டி போட்டு தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அதிக சலுகைகளை அறிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் 8 பயனர்கள் ஒரே நேரத்தில் வீடியோ அழைப்பு செய்ய முடியும் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தார்கள்.
தற்போது கூகுள் அவர்களுடைய Google Duo செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுவர இருக்கின்றார்கள். ஏற்கனவே சமீபத்தில் 12 யனர்கள் ஒரே நேரத்தில் வீடியோ அழைப்பு செய்ய முடியும் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்தார்கள்.
இனி விரைவில், நெட்வொர்க் வேகம் குறைவாக இருந்தால் கூட வீடியோ அழைப்புக்களை மிகத் தெளிவாக செய்வதற்கான அம்சத்தை அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள். மேலும், கூகிள் டியோ பயன்பாட்டில் உள்ள வீடியோ அழைப்பின் போது பயனர்களும் புகைப்படங்களைக் கிளிக் செய்ய முடியும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி Google Duo பயன்படுத்தும் பயனர்களின் மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.