ஆர்டர் செய்தால் ஆவின் பொருட்கள் வீடு தேடி வரும்

Aavin zomato dunzo collaborate to serve people

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக பால் கிடைக்காமல் பொதுமக்கள் அவதியுறுவதை தவிர்க்கும் விதத்தில் வீடு தேடி வரும் புதிய வசதிகளை ஆவின் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளார்கள். 

ஆவின் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில்..

பால் உபபொருட்கள் விநியோகம் செய்வதற்காக ZOMATO மற்றும் DUNZO நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனமும் இணைந்து சேவையாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.பொது மக்கள், நுகர்வோர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த அறிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் ஆவின் முகவர் நியமன வைப்புத்தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.