15GB ஸ்டோரேஜ் மட்டுமே FREE ? Google Photos சேவை இனி இலவசம் இல்லை!

கூகுள் போட்டோஸ் சேவையின் இலவச வரம்பற்ற ஸ்டோரேஜ் நன்மையை முடிவுக்கு வந்துள்ளது. இனி வெறும் 15GB ஸ்டோரேஜ் மட்டுமே இலவசம் என்று கூகுள் கூறியுள்ளது. 

பெரும்பாலான மொபைல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் “கூகுள் போட்டோஸ்” செயலியை கேலரி அப்ளிகேஷனாக பயன்படுத்தி வருகின்றார்கள். போனில் எடுக்கும் போட்டோ/வீடியோக்களை உயர்தரத்தில் கிளவுட்டில் பேக்-அப் எடுக்க இந்த ஆப் உதவியது.

இந்த சேவை கடந்த ஐந்து ஆண்டுகளாக அன்லிமிடெட்டாக இருந்து வந்தது. இந்நிலையில் வருகிற ஜூன் 1, 2021 முதல் 15GB வரை மட்டுமே கூகுள் போட்டோஸில் இலவசமாக பேக்-அப் எடுக்க முடியும் என கூகுள் கூறியுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய கொள்கையின்படி ஜூன் 1 முதல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செயலற்ற அக்கவுண்ட்களின் உள்ளடக்கத்தை நீக்குவதற்கான கொள்கையையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 

கூகுள் இந்த அன்லிமிட்டட் சேவையை நிறுத்த முக்கியமான காரணம் பயனாளர்களை ‘கூகுள் ஒன்’ பக்கம் இழுத்து வரவே என்று தெரிகின்றது.

கூகுள் ஒன் விலை (இந்தியாவில்)