மீண்டும் இந்தியாவிற்கு வருகிறது பப்ஜி !

PUBG மொபைல் இந்தியாவில் திரும்புவதாக PUBG கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இந்த தகவல் பப்ஜி ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.

பப்ஜி விளையாட்டு சில பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த சில தினங்களாக பப்ஜி  விளையாட்டு மீண்டும் இந்தியாவில் வரும் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன.  இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. 

PUBG கார்ப்பரேஷன்  வெளியிட்டிருக்கும் தகவலின்படி இந்திய பயனர்களுக்காக PUBG MOBILE INDIA என்கிற ஒரு கேம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புதிய விளையாட்டிற்காக 740 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

இந்திய அரசின் அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இந்த கேம் தயாராகி வருகின்றது. மேலும் இந்திய பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேமித்து வைக்கும் தரவு சேமிப்பு அமைப்புகளை இந்தியாவில் நிறுவ அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.