அரசுக்குச் சொந்தமான BSNL நிறுவனம் குறைவான விலையில் அதிக டேட்டா நன்மையை வழங்கி வருகிறது.தற்போது ரூ.599-க்கு 3300GB டேட்டா வழங்கும் Fiber Basic Plus பிராட்பேண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்தத் திட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்.
ஏர்டெல் வழங்கும் ரூ.499 எக்ஸ்ட்ரீம் ஃபைபர் திட்டத்துக்கு போட்டியாக பிஎஸ்என்எல் ரூ.599 என்கிற புதிய ‘ஃபைபர் பேசிக் பிளஸ்’ திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த ரூ.599 திட்டத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், எங்கெல்லாம் நிறுவனத்தின் ஃபைபர்-டு-ஹோம் (எஃப்.டி.டி.எச்) சேவை அணுக கிடைக்கிறதோ, அங்கெல்லாம் இந்த புதிய திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைப்பது தான். இருப்பினும், அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் இந்த புதிய பிராட்பேண்ட் திட்டம் கிடைக்காது.
பிஎஸ்என்எல்லின் நிறுவனத்தின் புதிய ஃபைபர் பேசிக் பிளஸ் பிராட்பேண்ட் திட்டம் ரூ.599 விலையில் வரம்பற்ற தரவை வழங்குகிறது, அதே நேரத்தில் மொத்த தரவு 60 எம்.பி.பி.எஸ் வேகத்தில் 3300 ஜிபி வரை வழங்குகிறது. இந்த தரவு வரம்பு முடிந்தவுடன் அதன் வேகம் 2 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களுக்கு நவம்பர் 11, 2020 முதல், ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
இந்த புதிய திட்டம் மற்ற தனியார் நிறுவனங்களின் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு கடும் போட்டி கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.