99 ரூபாய் கொடுத்து மொபைல் வாங்கலாம் ! ரெட்மி தீபாவளி சிறப்பு சலுகை

ரெட்மி நிறுவனம் Diwali Sparkling சலுகையை அறிவித்துள்ளார்கள் இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் 99 ரூபாய் மட்டும் செலுத்தி மொபைல் போன்களை வாங்க முடியும். அதன் பிறகு மீத தொகையை EMI வசதி மூலமாக கட்டிக் கொள்ளலாம்.

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் அறிமுகம் செய்யும் ரெட்மி நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு Diwali Sparkling சலுகையை அறிவித்துள்ளார்கள். இந்த ஆண்டில் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த  ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

பெரும்பாலான மக்கள் பட்ஜெட் விலையில் அதிகம் ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்களை அதிகம் எதிர்பார்க்கின்றார்கள் இதை கருத்தில் கொண்டு ரெட்மி நிறுவனம், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருந்தார்கள்.

தற்போது MI ஸ்டோர் வழியாக ரெட்மி 9 ப்ரைம், ரெட்மி நோட் 9, மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களில் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மொபைலை வாங்கும்போது வெறும் 99 ரூபாய் மட்டும் செலுத்தி மொபைல் போன்களை வாங்க முடியும். அதன் பிறகு மீத தொகையை EMI வசதி மூலமாக கட்டிக் கொள்ளலாம்.என்று நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.