YouTube Down: முடங்கியது யூடியூப் சேவை !

மிகப்பெரிய வீடியோ தளமான யூடியுப் இன்று உலகம் முழுவதும் இயங்காததால் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். நாள்தோறும் யூட்யூப் தளத்தில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இதில் பதிவேற்றப்படும் வீடியோக்களுக்கு விளம்பரத்துக்கு ஏற்றவாறு வருவாயும் கிடைக்கின்றது இதன் காரணமாக பெரும்பாலான வீடியோ கிரியேட்டர்கள் யூடியூப்பை நம்பியுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை யூடியூப் சேவை முடங்கியது. இதன் காரணமாக யூடியூபே நம்பியிருந்த வீடியோ கிரியேட்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருந்தார்கள். இதற்கு பதிலளித்த யூடியூப் நிர்வாகம் பிரச்சனைகளை சரிசெய்து கொண்டு இருப்பதாக தெரிவித்தது.

அதன் பிறகு சிறிது நேரத்திலேயே யூடியூப் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது.