OnePlus Nord SE ஸ்மார்ட்போன் பற்றி வெளிவந்த புதிய தகவல் !

OnePlus Nord SE ஸ்மார்ட்போன் பற்றின பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 

ஒன் ப்ளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் நார்டு மொபைலை மிட்-ரேன்ஜ் விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் 5ஜி தொழில் நுட்பத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து ஒன் பிளஸ் நிறுவனம் கடந்த மாதம் நார்டு என்10 5ஜி மற்றும் நார்டு என்100 போன்ற ஸ்மார்ட்போன்களை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி OnePlus Nord SE என்கின்ற ஸ்மார்ட்போன் 2021 ஆம் ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட்போனில் AMOLED டிஸ்பிளே, வார்ப் சார்ஜ் 65, ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. 

மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலமாக 4500 எம்ஏஹெச் பேட்டரியை 40 நிமிடங்களுக்குள் சார்ஜ் செய்யும் திறன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகியிருக்கும் இந்த தகவலை ஒன் பிளஸ் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.