ரெட்மி நிறுவனத்தில் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன்களுக்கு MIUI 12 அப்டேட் வரத்தொடங்கியுள்ளது.
ரெட்மி நிறுவனம் அதன் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12 ஸ்டாண்டர்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது. மேலும் இந்தப் புதிய அப்டேட்டை பெற்ற வாடிக்கையாளர்கள் சமூக வலைத்தளங்களில் அது சார்ந்த ஸ்கரின் ஷாட்களை பதிவேற்றி வருகின்றார்கள்.
பயனாளர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்த Screen Shot அடிப்படையில் இந்த அப்டேட்டின் அளவு 2 ஜிபி என்று தெரியவந்துள்ளது. எனவே அப்டேட் செய்வதற்கு முன் நல்ல இணைய வசதி மற்றும் மொபைலில் பேட்டரி திறனை சரி பார்த்த பிறகு உங்கள் ரெட்மி நோட் 8 மொபைலை அப்டேட் செய்து கொள்ளுங்கள்.