Google says it sent some users’ private videos to strangers

தவறுக்காக மன்னிப்பு கேட்ட கூகிள் | The Google Photos Controversy

கூகிள் போட்டோஸ் பல பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் சில பயனர்களின் தனிப்பட்ட வீடியோக்களை, மற்றும் புகைப்படங்களை தற்செயலாக அந்நியர்கள் பதிவிறக்கம் செய்து மாற்றி அனுப்பியதற்காகக் கூகிள் மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த தகவல் கூகுள் போட்டோஸ் பயன்படுத்தும் பயனாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பயனர்கள் தங்களுடைய ஸ்மார்ட்போனில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேக்கப்-ல் ஸ்டோரேஜ் செய்து கூகுள் போட்டோஸ் செயலியை பயன்படுத்தி வருகின்றார்கள்.

கடந்த நவம்பர் 21 முதல் நவம்பர் 25 வரை கூகிள் டேக்அவுட்டைப் பயன்படுத்திய நபர்களில் சில நபர்களுக்கு அந்நியர்களின் வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்ய மாற்றி அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்ப தவறுக்கு கூகுள் தற்போது மன்னிப்பு கேட்டுள்ளது இந்த தவறை சரி செய்து விட்டதாக கூறினார்கள்.