பிளாக்பெரி ஸ்மார்ட்போன் சந்தையில் இருந்து வெளியேறுகிறது : TCL will no longer sell BlackBerry Smartphones

ஒரு காலத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் கொடிகட்டி பறந்த நிறுவனம் ப்ளாக்பெரி ஆண்டுக்கு சுமார் 500 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்து சாதனையும் புரிந்தது.
இப்படி இருந்த ப்ளாக்பெரி இந்நிறுவனம் சமீபகாலமாக விற்பனையில் மிகப்பெரிய சரிவை கண்டுள்ளது. அதற்கு முக்கியமான காரணம் தற்போது சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் உலகில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நிறுவனம் கைமாறுகின்றதா என்பதை பற்றிய எந்த ஒரு தகவலும் இல்லை ஆனால் பிளாக்பெரி நிறுவனம் ஸ்மார்ட் போன் சந்தையில் இருந்து ஒட்டுமொத்தமாக வெளியேறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.