பிற நிறுவனங்களை விமர்சனம் செய்த POCO ! கம்மி விலையில் FHD+ டிஸ்பிளே ? போக்கோ M3 வாங்கலாமா ?

போக்கோ நிறுவனம் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இந்திய சந்தையில் போக்கோ M3 மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த மொபைல் இந்திய சந்தையில் 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.10,999 க்கும், 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.11,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிற நிறுவனங்களை கிண்டலடிக்கும் POCO ! 

2021 ஆம் ஆண்டு ஆகியும் இன்னமும் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாய்க்குள் அறிமுகம் செய்யப்படும் பல்வேறு ஸ்மார்ட்போன்களில் HD டிஸ்ப்ளே தான் பயன்படுத்தி வருகிறது இதை போக்கோ இந்தியாவின் இயக்குனர் அனுஜ் சர்மா விமர்சனம் செய்துள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில் “ 2013ஆம் ஆண்டு Full HD டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. 2021 ஆம் ஆண்டிலும் பல்வேறு நிறுவனங்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் அறிமுகம் செய்யப்படும் மொபைல்களுக்கு HD டிஸ்ப்ளே தான் போடுகின்றார்கள்.
ஆனால் போக்கோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த போக்கோ M3 மொபைலில் FHD + டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

Also Read : போக்கோ M3 மொபைலை ரூ. 1,000 குறைவாக வாங்கலாம் ! எப்படி ?