சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி A51 மொபைலுக்கு புதிய அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது இதை பற்றி விரிவாக பார்க்கலாம்..
சாம்சங் நிறுவனம் கடந்த ஆண்டு Samsung Galaxy A51 மொபைலை அறிமுகம் செய்திருந்தது. முதற்கட்டமாக ரஷ்யாவில் உள்ள கேலக்ஸி A51 பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன் யுஐ 3.0 வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி A51 மொபைலுக்கு ஆண்ட்ராய்ட் அப்டேட் எப்போது வரும் என்பதைப் பற்றிய தகவலை நிறுவனம் தரப்பின் இதுவரைக்கும் கூறவில்லை.
ஏற்கனவே சாம்சங் நிறுவனம் இந்த மொபைலுக்கு மூன்று ஆண்ட்ராய்ட் அப்டேட்டை கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தது. இதன் காரணமாக மிக விரைவில் இந்தியாவிலும் கேலக்ஸி A51 மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.