பேஸ்புக்கின் Messenger Rooms அறிமுகம்!ஒரே நேரத்தில் 50 நபர்களுடன் வீடியோ கால் பேசலாம்

Facebook launches Messenger Rooms for unlimited video calls with up to 50 people

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றார்கள். இதன் காரணமாக பெரும்பாலான நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவித்துள்ளார்கள்.

அதேபோன்று பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் வீடியோ காலிங் செயலியை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

இதன் காரணமாக Zoom செயலியின் பயனர்களின் எண்ணிக்கை 10 மில்லியன் தினசரி பயனர்களிடமிருந்து 200 மில்லியன் தினசரி பயனர்களாக அதிகரித்துள்ளது. இதற்குப் போட்டியாக பேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் ரூம்ஸ்-ஐ  அறிமுகம் செய்துள்ளது.

பேஸ்புக் மெசஞ்சர் ஏற்கனவே வீடியோ காலிங் அம்சம் இருக்கின்றது ஆனாலும் ஃபேஸ்புக் அக்கவுண்ட் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும். ஆனால் தற்போது அறிமுகம் செய்திருக்கும் Messenger Roomsல்பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்கள் கூட வீடியோ சாட்டில் இணையிலாம்.

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த ரூம்ஸ் அம்சம் end-to-end encrypted செய்யப்படவில்லை, ஒரே நேரத்தில் 50 நபர்கள் வரை வீடியோ செய்யலாம்.

இந்த செயலி இந்த வாரத்தில் ஒரு சில நாடுகளில் வெளியாகின்றது.