உள்ளூர் மளிகை கடை பொருட்களை அமேசானில் வாங்கலாம்

Amazon India launches ‘Local Shops on Amazon’ program

அமேசான் நிறுவனம் ஜியோ நிறுவனத்தின் JioMartக்கு போட்டியாக ‘Local Shops on Amazon’ என்ற புதிய திட்டத்தை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலமாக உள்ளூர் கடைகள் தங்களை டிஜிட்டல் கடைகளாக மேம்படுத்த முடியும் என Amazon தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த திட்டம் சோதனை அடிப்படையில் பெங்களூர், மும்பை, டெல்லி, ஹைதராபாத், புனே, ஜெய்ப்பூர், அகமதாபாத், கோயம்புத்தூர் மற்றும் பல நகரங்களில் இருந்து. தற்போது இந்தியாவின் 100 நகரங்களில் உள்ளூர் விற்பனை கடைகளை திறக்க அமேசான் திட்டமிட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, இந்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை விதித்துள்ளது, இந்த சமயத்தில் இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால் அதிக அளவிலான பயனர்களை ஈர்க்க முடியும் என்று அமேசான் நம்புகின்றது..