டிக்டாக் செயலிக்கு போட்டியாக களமிறங்க யூடியூப் முடிவு .!

YouTube is targeting TikTok ? YouTube Testing TikTok-Like Short Video Format on Android, iOS

சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக இந்த செயலியை  இந்தியாவில் அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த டிக் டாக்  செயலியில்  பதிவிடப்படும் 15 முதல் 30 வினாடி வரையிலான வீடியோக்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக தற்போது டிக்டாக் ஸ்டையில் குட்டி வீடியோக்களை வெளியிடலாமா என்று யூடியூப் ஆராய்ச்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


YouTube Shorts என்ற பெயரில் ஏப்ரல் மாதத்தில் ஏற்கனவே யூடியூப் விளம்பரத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய அம்சத்தை குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் கொடுத்து இதை சோதனை செய்துவிட்டு மற்ற பயணிகளுக்கும் கொடுத்த யூடியூப் திட்டமிட்டுள்ளது.