Noida : Not Getting Enough ‘Likes’ on TikTok, 18-Year-Old Commits Suicide
இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கி இருக்கின்றார்கள். இந்த சூழ்நிலையில் அவர்களின் முக்கிய பொழுதுபோக்கு சமூக வலைதளம் என்று கூறலாம்.
நொய்டாவில் இளைஞர் ஒருவர் TikTok-ல் லைக் அதிகம் வரவில்லை என்கின்ற காரணத்திற்காக தற்கொலை செய்துள்ளார். இவர் நொய்டாவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த சம்பவம் பற்றி போலீஸ் அதிகாரி ஷைலேஷ் தோமர் கூறுகையில், இந்த 18 வயது இளைஞர் பொழுதை கழிப்பதற்காக அதிக அளவில் டிக் டாக் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்த லைக் அவருக்கு வரவில்லை என்ற வருத்தத்தை தன்னுடைய தந்தையிடம் அடிக்கடி கூறி வந்துள்ளார்.
இந்த தற்கொலை பற்றின முதற்கட்ட விசாரணையில் டிக்டாக் செயலில் அதிக லைக் கிடைக்காத காரணத்தினால் இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.