Realme Narzo 10 Series : Realme Narzo 10 series launch postponed again
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து இந்திய சந்தையில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் இன்று( ஏப்ரல் 21) ரியல்மி நர்சோ 10 மற்றும் நர்சோ 10 ஏ என்கின்ற இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் ரியல்மி இந்த ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதை ஒத்தி வைத்துள்ளார்கள்.
ரியல்மி நார்சோ 10 மற்றும் ரியல்மி நார்சோ 10 ஏ ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 6i மற்றும் ரியல்மி சி3 மொபைல்களில் மறுபதிப்பு என்று கூறப்படுகிறது.