மொபைலுக்கு காற்றிலியே சார்ஜ் செய்யலாம் ! சியோமியின் வேறலெவல் டெக்னாலஜி

காற்றின் மூலம் மொபைலுக்கு சார்ஜ் ஏற்றும் புதிய டெக்னாலஜியை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய மொபைல் சந்தையில் சியோமி நிறுவனம் 2012ஆம் ஆண்டு கால்பதித்தது. நோக்கியா, சாம்சங் போன்ற மொபைல்களில் இருக்கும் சிறப்பம்சங்களை மிகக் குறைவான விலைக்கு சியோமி நிறுவனம் வழங்கியதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

அதன்பின் சியோமி நிறுவனம் MI டிவி, MI லேப்டாப், பவர்பேங்க் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை இந்திய சந்தையில் தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தார்கள். இந்நிலையில் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்காத ;MI “ ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர் “ என்கின்ற புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலமாக வொயர் பயன்படுத்தாமல் ஒரே நேரத்தில் பல டிவைஸ்களை சார்ஜ் செய்ய முடியும்.அதாவது MI ஏர் சார்ஜ் வயர்லெஸ் சார்ஜர் மூலம் டிஜிட்டல் டிவைஸ்களை இனி காற்றிலேயே சார்ஜ் செய்ய முடியும். இந்த தகவலை சியோமி நிறுவனம் அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் நீங்கள் ஸ்மார்ட்போனில் விளையாடும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கும் விதத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 மீட்டர் தூரம் வரை இந்தக் கருவியின் மூலம் டிஜிட்டல் சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும் என சொல்லப்படுகிறது. இந்த புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் வெற்றிகரமாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டால் இந்த கண்டுபிடிப்பு பாராட்டிற்குரியதே.