ரெட்மி நோட் 10 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது !

மிகவும் எதிர்பார்க்கப்படும் ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 மொபைல் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..

ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக BIS  சான்றிதழ் தளத்தில் M2101K7AI எனும் மாடல் நம்பர் கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது.

ரெட்மி நிறுவனம் கடந்த ஆண்டு ரெட்மி நோட் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை  இந்தியாவில் அதிக அளவில் விற்பனை செய்தது. இதேபோல் 2021 ஆம் ஆண்டில் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அதிக அளவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?

ரெட்மி நோட் 10 மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைலின் விபரங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வருகின்றது, வெளியாகி இருக்கும் தகவலின்படி ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி பிராசஸர் உடன் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைல் பொருத்தவரைக்கும் 64 மெகா பிக்சல் கொண்ட கேமரா அல்லது 108 மெகாபிக்சல் கொண்ட கேமரா உடன் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கலாம்.  இதன் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ரெட்மி நோட் 10 ப்ரோ மாடலானது ரூ.16,999 அல்லது ரூ.19,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.