போக்கோ M3 பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகிறது !

POCO நிறுவனத்தின் போக்கோ M3 மொபைல் பிரபல e-commerce இணையதளமான பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு வருகிறது..

போக்கோ நிறுவனம் போக்கோ M3 மொபைலை இந்தியாவில் வருகிற பிப்ரவரி 2ஆம் தேதி அறிமுகம் செய்கின்றது. இதன் வெளியீட்டு நிகழ்வு ஆன்லைன் வழியாக மதியம் 12 மணிக்கு தொடங்க போக்கோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்வதற்கு முன்பதாகவே POCO M3 மொபைலில் பட்டியல் பக்கம் பிளிப்கார்ட் தளத்தில் நேரலையில் இருக்கின்றது.

இதன் மூலமாக POCO M3 மொபைல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது.இந்த மொபைல் சர்வதேச சந்தையில் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் மற்றும் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பிளிப்கார்ட் தளத்தில் நேரலையில் இருக்கும் பக்கத்தில் POCO M3  மொபைலின் 6 ஜிபி ரேம் மாடலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 POCO M3 மொபைலின் விலை இதுவரைக்கும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் இந்த மொபைல் இந்திய சந்தையில் 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாய்க்குள் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.