WhatsApp will release an update for iPhone Users
உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வீடியோ காலிங் செயலி பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதைக் கருத்தில் கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் ஆன்டிராய்டு பயனாளர்களுக்கு ஏற்கனவே வீடியோ காலிங் அம்சத்தில் 8 நபர்கள் வரை பங்கேற்கும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்தார்கள்.
தற்போது ஐபோன் பயனாளர்களுக்கு இந்த அப்டேட்டை வாட்ஸ்அப் வழங்கியுள்ளது. இந்த புதிய அம்சம் மூலமாக ஐபோன் பயனர்கள் இப்போது ஒரே நேரத்தில் 8 பேருக்கு கால் செய்யலாம்.