`Agree’ கொடுக்கவில்லை என்றால் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது !

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் அதன் சேவை விதிமுறைகள் (Terms of Service) மற்றும் அதன் தனியுரிமைக் கொள்கையில் (privacy policy) மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

வாட்ஸ்அப்  தங்களுடைய பயனர்களுக்கு ஒரு pop-up ஒன்றை அனுப்பியுள்ளது. வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனாளர்கள் நேற்றைய தினம் அல்லது இன்றைய தினத்தில் கண்டிப்பாக பெற்றிருப்பீர்கள். பலரும் படிக்காமலே ‘Agree’ கொடுக்கவும் செய்திருப்பீர்கள்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தனது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை புதுப்பிக்கிறது. வாட்ஸ்அப்பின் புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கை மற்றும் சேவை விதிமுறைகள், வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனாளர்களின் தரவுகளை எவ்வாறு சேகரிக்கிறது மற்றும் கையாளுகிறது என்பதற்கான கூடுதல் தகவல்களை வழங்குகிறது. 

இந்த புதிய தனியுரிமை விதிகளுக்கு ஒப்புக்கொள்ள விரும்பாதவர்கள், தங்கள் கணக்குகளை நீக்கிக் கொள்ளலாம். பிப்ரவரி 8 முதல் நடைமுறைக்கு வரும் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை, அனைத்து Whatsapp சேவைகளுக்கும் பொருந்தும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்அப் கொண்டு வந்திருக்கும் இந்த புதிய மாற்றத்தில் மிக முக்கியமானவை மீடியா ஃபைல்களை தங்களின் சர்வர்களில் வாட்ஸ்அப் ஸ்டோர் செய்யப்போகிறது என்பதுதான். உங்கள் அனுமதியுடன் உங்கள் சாதனத்திலிருந்து துல்லியமான இருப்பிடத் தகவல்களையும் Whatsapp சேகரித்து பயன்படுத்துகிறது.

மேலும், Whatsapp, உங்களுடைய தகவல்களை சேகரிப்பதன் மூலமாக உங்களின் பயன்படுத்தும் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு சேவைகளை வழங்க வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது..

*வாட்ஸ்அப் கொண்டு வந்து இருக்கும் மாற்றத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கீழே இருக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்..

https://www.whatsapp.com/legal/updates/privacy-policy/

https://www.whatsapp.com/legal/updates/terms-of-service