வாட்ஸ் அப் செயலி மூலமாக பணம் பரிமாற்றம் செய்யலாம் !

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாட்ஸ் அப் செயலி மூலம் பணப் பரிமாற்றம் செய்யும் வசதியை விரிவுபடுத்த, தேசிய பணப் பட்டுவாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் மூலமாக பண பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதியை வாட்ஸ் அப் செயலியில் 10லட்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டும் சோதனை அடிப்படையில் வாட்ஸ்அப் வழங்கியது.

இந்நிலையில் 2கோடி வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு இந்த சேவையை விரிவுபடுத்த தேசிய பணப் பட்டுவாடா கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலமாக பயனாளர்கள் வாட்ஸ்அப் மூலமாக மிக எளிதாக பாதுகாப்பான முறையில் பண பரிமாற்றம் செய்ய முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளார்கள்.