மெசேஜ் தானாகவே அழிந்துவிடும் ! வாட்ஸ்அப் புதிய அப்டேட்

வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும் மெசேஜ்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் தானாக மறைந்துவிடும் என்கின்ற புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு புதிய அம்சங்களை கொடுத்து வருகின்றார்கள். அந்தவகையில் தற்போது வாட்ஸ் அப் செயலியில் அனுப்பும் மெசேஜ்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் தானாக மறைந்துவிடும் அம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப் Disappearing messages என்றழைக்கப்படும், இந்தப் புதிய அம்சம் மூலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள கால வரம்பை அடைந்தவுடன் மெசேஜ்கள் தானாகவே அழிந்துவிடும், இதற்கு அவகாசம் ஏழு நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அம்சத்தை பயனாளர்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம். குரூப் சேட்டிங்களுக்கு பயன்படுத்தும்போது இந்த அம்சத்தை குரூப் அட்மின் மட்டும் செயல்படுத்த முடியும்.