வாட்ஸ் ஆப் மூலம் கேஸ் சிலிண்டர் புக் செய்வது எப்படி ? Indane Gas புக்கிங்

Indane Gas Consumers can now book LPG refills on WhatsApp..
WhatsApp number for Indane gas consumers is 7588888824..

கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான நடைமுறையை தற்போது இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indane Gas Cylinder) எளிமையாக்கி உள்ளது. Indane Gas பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தற்போது தங்களுடைய வாட்ஸ்அப் எண் மூலமாக மிக எளிதாக சமையல் எரிவாயு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான அறிவிப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (Indane Gas Cylinder) தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

எப்படி வாட்ஸ் அப் மூலமாக சமையல் எரிவாயு முன்பதிவு செய்வது ?

Indane Gas பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து REFILL என்று டைப் செய்து 7588888824 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.