தேவையற்ற File-களை நீக்குவதற்கு வாட்ஸ்அப் புது அப்டேட் !

வாட்ஸ்-அப் செயலியில் உள்ள தேவையற்ற மீடியா ஃபைல்களை எளிதாக நீக்குவதற்காக வாட்ஸ்அப் புதிய அம்சம் ஒன்றை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனம் வாரவாரம் புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில், தேவையற்ற வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் மீடியா ஃபைல்களை மொத்தமாக நீக்குவது மிகப் பெரிய தலைவலியாக இருந்து வந்தது.

இதற்கு தற்போது வாட்ஸ்அப் நிறுவனம் தீர்வு கண்டுள்ளது.  தேவையற்ற வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள், வீடியோக்கள், மெசேஜ்கள் மற்றும் மீடியா ஃபைல்களை நீக்குவதற்கான புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய அம்சத்தை எப்படி பயன்படுத்த வேண்டும் ?

வாட்ஸ்அப்பை ஓபன் செய்து மேலே வலது பக்கத்தில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு Settings -> Data and Storage usage என்பதற்குள் சென்று Manage Storage என்ற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும். அதன்பிறகு தேவையற்ற வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் மற்றும் மீடியா ஃபைல்களை மொத்தமாக நீக்கிவிடலாம்.