அண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் Multi-Device Support வசதியை வழங்குகின்றது வாட்ஸ் அப் !

வாட்ஸ் அப் நிறுவனம் தங்களுடைய ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கு Multi-Device Support வசதியை மிக விரைவில் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ் அப் நிறுவனம் Multi-Device Support வசதியை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் மிக விரைவில் கொடுக்கும் என்று தெரிகிறது. 2019ஆம் ஆண்டு இந்த அம்சம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்தாலும் இதுவரைக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்திடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்அப் அம்சங்கள் டிராக்கர் WABetaInfo இன் அறிக்கையின்படி, Android க்கான WhatsApp 2.21.1.1 பீட்டாவில் Multi-Device Support  சோதனைக்கு பரிந்துரைக்கும் என்று தெரியவந்துள்ளது. 

WABetaInfo ஆல் பகிரப்பட்ட சில ஸ்கிரீன் ஷாட்கள், வாட்ஸ்அப் WEB அல்லது Desktop client பயன்படுத்தும் போது பயனர்கள் தங்கள் தொலைபேசிகளை இணைக்கத் தேவையில்லை என்பதைக் குறிப்பிட ஒரு பாப்-அப் செய்தியை வாட்ஸ்அப் வழங்கும் என்று பரிந்துரைக்கிறது. 

Multi-Device Support வசதி மூலமாக நான்கு சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்க முடியும் என்ற வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஒரு தகவலின் படி Multi-Device Support வசதி மிக விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.