இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் டிவி பிராண்ட் ரியல்மி !

ரியல்மி சந்தையில் நுழைந்த ஒரு வருடத்திற்குள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சிறந்த ஸ்மார்ட் டிவி பிராண்டாக மாறியுள்ளது.

ரியல்மி ஸ்மார்ட் டிவி சந்தைக்கு புதிது என்றாலும் கடந்த ஆண்டு விற்பனையில் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசியின் புதிய அறிக்கையின்படி, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட் டிவி பிராண்டாக ரியல்மி திகழ்கின்றது.

சியோமி மற்றும் பிறவற்றை விட சிறந்த அம்சங்களை வழங்குவதற்கும் ஒரு புதிய SLED காட்சி தொழில்நுட்பத்துடன் ரியல்மி இந்திய சந்தையில் நுழைந்தது. இந்த வளர்ச்சி பாதையில் ரியல்மி தொடர்ந்தால், இந்தியாவில் மிக விரைவில் ஸ்மார்ட் போன் சந்தையில் முதல் இடத்தை நோக்கி பயணிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

ஐடிசியின் அறிக்கையின்படி, ரியல்மி 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதன் சந்தைப் பங்கை இரட்டிப்பாக்கி, இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் டிவி பிராண்டாக மாறியுள்ளது. இந்த பிராண்ட் Q2 மற்றும் Q3 2020 க்கு இடையில் ஏற்றுமதியில் 240 சதவீதம் வளர்ச்சியைக் கண்டது. 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், ஸ்மார்ட் டிவி பிரிவில் ரியல்மே 3.2 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருந்தது. இது 2020 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 7.5 சதவீதமாக இரட்டிப்பாகி, வேகமாக வளர்ந்து வரும் டிவி பிராண்ட் பட்டத்தை ரியல்மி அடைந்துள்ளது. 

ரியல்மி ஸ்மார்ட் டிவியின் விலை பட்டியல் :

Realme Smart TV (32-Inch)Rs. 13,999Flipkart
Realme Smart TV (43-Inch)Rs. 22,999Flipkart
Realme Smart TV SLED 4K (55-Inch)Rs. 39,999Flipkart