இருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்தது வி !

ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக இருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்துள்ளது வி(VI).  இந்த புதிய சலுகை பற்றி விரிவாகப் பார்க்கலாம்..

ஜியோ நிறுவனம் மிகக்குறைந்த விலைக்கு அதிக டேட்டா சலுகையை வழங்கியது இதன்காரணமாக இந்திய தொலைத் தொடர்புத் துறையில் கடுமையான போட்டி ஏற்பட்டது. இதற்கு போட்டி கொடுக்கும் விதமாக வி(VI) நிறுவனம் இருமடங்கு டேட்டா சலுகையை அறிவித்துள்ளது.

வி(VI) நிறுவனம் தன்னுடைய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு இரு மடங்கு  டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. அதாவது வி ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 சலுகைகளை ரீசார்ஜ் செய்வோருக்கு இருமடங்கு டேட்டா வழங்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த மூன்று திட்டத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் புது சலுகையின் கீழ் வாடிக்கையாளர்கள் தினமும் 4 ஜிபி டேட்டா பயன்படுத்த முடியும்.

வி(VI) ரூ. 299 ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ. 299 சலுகை பலன்களை பொருத்தவரை தினமும் 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி ஆப் பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

வி(VI) ரூ. 449 ப்ரீபெய்ட் திட்டம் : 

ரூ. 449 சலுகை பலன்களை பொருத்தவரை தினமும் 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி ஆப் பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

வி(VI) ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம் :

ரூ. 699 சலுகை பலன்களை பொருத்தவரை தினமும் 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், வி மூவிஸ் & டிவி ஆப் பயன்படுத்துவதற்கான சந்தா உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.